தமிழ்நாடு

tamil nadu

புத்தாண்டை முன்னிட்டு கொடிவேரி அணையில் குளிக்க தடை!

By

Published : Dec 31, 2020, 3:54 PM IST

ஈரோடு: கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கொடிவேரி தடுப்பணை அருவியில் புத்தாண்டு தினத்தன்றும், அதற்கு அடுத்த நாளும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

புத்தாண்டிற்கு கொடிவேரி அணையில் குளிக்க தடை!
புத்தாண்டிற்கு கொடிவேரி அணையில் குளிக்க தடை!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிப்பதற்காகவும், அங்குள்ள கடைகளில் விற்கப்படும் ஆற்று மீன் வருவலை ருசிப்பதற்காகவும், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

குறிப்பாக பண்டிக்கை மற்றும் விடுமுறை காலங்களில் அதிகமாக வருவார்கள். இதில் கடந்த எட்டு மாதங்களாக கரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த போது இந்த அருவி மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து, தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த 10 நாட்களாக பொதுமக்களின் பார்வைக்காகவும், குளிப்பதற்கும் கொடிவேரி தடுப்பணை அருவி திறக்கப்பட்டுள்ளது.

கொடிவேரி தடுப்பணை அருவி

இந்நிலையில், வரும் புத்தாண்டு அன்று (ஜன. 1) கொடிவேரி அணையில் குளிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிமாக இருக்கும் என்பதால், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கும், அருவியில் குளிப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதையும் படிங்க...சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் மூலம் வசூல்:பிப்ரவரி 15 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details