தமிழ்நாடு

tamil nadu

காட்டாற்று வெள்ளம்: போக்குவரத்து முடக்கம்!

By

Published : Aug 4, 2022, 9:35 AM IST

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் பலத்த மழை காரணமாக மாக்கம்பாளையம் பள்ளங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்து முடங்கியுள்ளது.

மாக்கம்பாளையம் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம்: போக்குவரத்து சேவைகள் முடக்கம்!
மாக்கம்பாளையம் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம்: போக்குவரத்து சேவைகள் முடக்கம்!

ஈரோடு:கடந்த சில நாட்களாக கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம், குரும்பூர், அருகியம் ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் ஓடைகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, அருகியம் மற்றும் குரும்பூர் பள்ளங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இவ்வாறு செந்நிறத்தில் ஓடும் வெள்ள நீரில், இரு சக்கர வாகனம் கூட இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் காய்கறி லாரிகள் மேலும் செல்ல முடியாமல் திரும்பி வந்தன. அதேபோல் கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்து ரத்து செய்யப்பட்டது. மேலும் மாக்கம்பாளையத்தில் விளைந்த காய்கறிகள் சந்தைப்படுத்த முடியாமல் அங்யேயே முடங்கியுள்ளன.

மாக்கம்பாளையம் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம்: போக்குவரத்து சேவைகள் முடக்கம்!

கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் பல்வேறு பள்ளங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், அவ்வப்போது போக்குவரத்து தடை ஏற்படுவதும், வெள்ளம் வடிந்த பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்குவதுமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சேலத்தில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

ABOUT THE AUTHOR

...view details