தமிழ்நாடு

tamil nadu

உரிய நேரத்தில் கரும்பு அறுவடை செய்யப்படாததால் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்ட விவசாயிகள்

By

Published : Jul 29, 2022, 9:08 PM IST

ஈரோட்டில் கரும்பை பயிரிட்ட விவசாயிகளிடமிருந்து 11 மாதங்களில் அறுவடை செய்ய வேண்டிய கரும்பை 16 மாதங்கள் ஆகியும் இதுவரை அறுவடை செய்யப்படாததால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

உரிய நேரத்தில் கரும்பு வெட்டாததால் சக்கரை ஆலையை  முற்றுகையிட்ட விவசாயிகள்
உரிய நேரத்தில் கரும்பு வெட்டாததால் சக்கரை ஆலையை முற்றுகையிட்ட விவசாயிகள்

ஈரோடு:ஈஐடி பாரி புகளூர் சரக்கரை ஆலை சார்பாக அரச்சலூர், கொடுமுடி , சிவகிரி போன்ற பல்வேறு பகுதி விவசாயிகளிடமிருந்து கரும்புகளை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் கரும்பை பயிரிட்ட விவசாயிகளிடமிருந்து 11 மாதங்களில் அறுவடை செய்ய வேண்டிய கரும்பை 16 மாதங்கள் ஆகியும் இதுவரை அறுவடை செய்யப்படாததால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். மேலும், காலம் தாழ்த்தி கரும்புகளை வெட்டுவதால் எடை குறைவதாகவும், வங்கியில் வாங்கிய லேன் கடன் கட்ட சொல்லி நெருக்கடி தருவதாகவும் தெரிவித்தனர்.

உரிய நேரத்தில் கரும்பு வெட்டாததால் சக்கரை ஆலையை முற்றுகையிட்ட விவசாயிகள்

எனவே ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்தில் கரும்பு வெட்டக்கோரி அரச்சலூரிலுள்ள புகளூர் சர்க்கரை ஆலை கோட்ட அலுவலகத்தை விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் முற்றையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரச்சலூர் காவல்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த செய்தனர்.

பின்னர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக ஆலை நிர்வாகத்தினர் உறுதி அளித்ததன் அடிப்படையில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையும் படிங்க:நியாய விலைக்கடைகளில் கீழே சிந்திய பொருட்களை விநியோகம் செய்யக்கூடாது!

ABOUT THE AUTHOR

...view details