தமிழ்நாடு

tamil nadu

'சவால் வேண்டாம்... களத்தில் இறங்குங்கள்' - கொங்கு ஈஸ்வரனுக்கு விவசாயிகள் கோரிக்கை

By

Published : Jan 27, 2020, 9:53 AM IST

ஈரோடு: 'கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் வெறும் வாயில் சவால் விடாமல் களத்தில் இறங்கி காலிங்கராயன் வாய்க்காலை தூர்வார வேண்டும்' என்று காலிங்கராயன் கால்வாய் பாசன விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

காலிங்கராயன் கால்வாயை தூர்வார கோரிக்கை
காலிங்கராயன் கால்வாயை தூர்வார கோரிக்கை

ஈரோடு மாவட்டம், பவானியில் தொடங்கி கரூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் கலக்கும் காலிங்கராயன் கால்வாய் 90 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. 738 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கால்வாயின் மூலம் பல்லாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலன்களைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் காலிங்கராயன் கால்வாய் தினத்தை முன்னிட்டு, காலிங்கராயன் கால்வாய் பாசன சபையின் சார்பில் பழனிகவுண்டன்பாளையத்தில் கால்வாய் கரையோரங்களில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பாசன சபையின் தலைவர் வி.எம்.வேலாயுதம், "நீர் நிலைகளைச் சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு எவ்வித ஆலைகளையும் அமைக்கக் கூடாது என்கிற சட்டமிருந்த நிலையிலும் கடந்த 20 ஆண்டுகளில் காலிங்கராயன் கால்வாயின் வலதுகரைப் பகுதியில் 200க்கும் மேற்பட்ட சாயம் மற்றும் தோல் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆலைகளிலிருந்து வெளியேறும் விஷக்கழிவுகள் நேரடியாக கால்வாயில் கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனைத் தடுக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை" என்று குற்றஞ்சாட்டினார்.

பாசன சபையின் தலைவர் வி.எம்.வேலாயுதம் பேட்டி

மேலும், "காலிங்கராயன் கால்வாயைத் தூய்மைப்படுத்துவதற்கு நடிகர் கார்த்தியும், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரனும் போட்டிப் போட்டுக் கொண்டு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. சவால் விடுவதை விட்டுவிட்டு விவசாயிகள் நலன் கருதியும், பொதுமக்கள் நலன் கருதியும் காலிங்கராயன் கால்வாயை தூய்மைப்படுத்தி விவசாயத்தை காப்பாற்றிட வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க:

அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணைத் தாக்குதல்

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details