தமிழ்நாடு

tamil nadu

நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு எவ்வளவு வாக்குகள்?

By

Published : Mar 2, 2023, 9:08 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 615 வாக்குகள் பெற்றுள்ளார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு இவ்வளவுதான் வாக்குகளா?
நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு இவ்வளவுதான் வாக்குகளா?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக தொடங்கி நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை பெற்றார். இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

அந்த வகையில், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை சூடு பிடித்துள்ளது. அதில் நாம் தமிழர் கட்சி மேனகா நவநீதன் 615 வாக்குகள் பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 99 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 10,952 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 3,305 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகித்து வருவதால், காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஈரோடு கிழக்கு: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை

ABOUT THE AUTHOR

...view details