தமிழ்நாடு

tamil nadu

பட்டாசு வெடிப்பதில் தகராறு - வயதான தம்பதி வெட்டி கொலை!

By

Published : Nov 14, 2020, 2:14 PM IST

ஈரோடு: கொடுமுடி அருகே வயதான தம்பதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். மதுபோதையில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் தம்பதியை கொலை செய்தார்களா? என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வயதான தம்பதி வெட்டிக் கொலை
வயதான தம்பதி வெட்டிக் கொலை

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சிட்டபுல்லாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வயதான தம்பதி ராமசாமி, அருக்காணியுடன். இங்கு இவர்களது மகள் மேனகா தீபாவளி பண்டிகைக்காக தனது கணவருடன் வந்துள்ளனர். அப்போது ஊரின் எல்லைப் பகுதியில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர், அவர்களது நண்பரின் பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். அவ்வழியாக வந்த மேனகா, அவரது கணவர் மீது பட்டாசுகளை வீசினர்.

அங்கு வந்த வயதான தம்பதி மதுபோதையில் இருந்த இளைஞர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை அடிக்கவும் முயன்றனர்.

இதனைத் தடுத்த அப்பகுதி மக்கள் வயதான தம்பதியை சமாதானம் செய்து மகள், மருமகனுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இன்று (நவ.14 ) அதிகாலை எழுந்த மேனகா தனது பெற்றோர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே மேனகா கொடுமுடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மதுபோதையில் தகராறு செய்த இளைஞர்கள் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி அருகே துப்பாக்கிச் சூடு: ஒருவர் கொலை, சுட்டவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details