தமிழ்நாடு

tamil nadu

ஈரோடு கிழக்கில் இன்று வாக்கு எண்ணிக்கை.. வெல்லப்போவது யார்.?

By

Published : Mar 2, 2023, 6:31 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மார்ச்.2) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 15 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 66.23 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், இந்த தேர்தலில் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆகவே, கூடுதலாக 8.56 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இந்த தேர்தலின் வாக்குபதிவு எந்திரங்கள் ஈரோடு மாவட்டம் சித்தோடு ஐஆர்டிடி பொறியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இங்கேயே வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன.

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறை 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதன்பின் மின்னணு வாக்குப்பதிவு வாக்குகள் எண்ணப்படும்.

இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டுள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டுள்ளார். அதேபோல, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதனும் தேமுதிக சார்பில் ஆனந்தும் போட்டியிட்டுள்ளனர். இப்படி மொத்தமாக 77 பேர் போட்டியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் - மல்லிகார்ஜூன கார்கே

ABOUT THE AUTHOR

...view details