தமிழ்நாடு

tamil nadu

ஈரோடு கிழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி: முழு நிலவரம்

By

Published : Mar 2, 2023, 6:52 AM IST

Updated : Mar 2, 2023, 11:03 PM IST

அதிமுக தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது
அதிமுக தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது

22:53 March 02

ஈரோடு கிழக்கு அதிகாரப்பூர்வ இறுதி முடிவுகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 15வது மற்றும் இறுதிச்சுற்று தபால் வாக்குகள் உட்பட மொத்தமாக எண்ணப்பட்ட வாக்குகள் குறித்து அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகியுள்ளது.

அதன்படி, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் - 1,10,156 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு - 43,923 வாக்குகளும்,

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் - 10,827 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் -1433 வாக்குகளும் பெற்றனர்.

இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தன்னை பிரதானமாக எதிர்த்த தென்னரசுவைவிட 66,233 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அதிமுக வேட்பாளரை தவிர, மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

18:01 March 02

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - ஈவிகேஎஸ் இளங்கோவன் அபார வெற்றி

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில், தபால் வாக்குகளுடன் சேர்த்து 15 சுற்றுகளில் மொத்தமாக எண்ணப்பட்ட வாக்குகளில் காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரம்:

திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் - 1,10,556 வாக்குகளும்,

அதிமுக வேட்பாளர் தென்னரசு - 43,981 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதன்மூலம், ஈவிகேஎஸ் இளங்கோவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட, அதிமுக வேட்பாளர் தென்னரசுவைவிட 66,575 வாக்குகள் பெற்று அபாரவெற்றி பெற்றுள்ளார்.

இதில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் - 9552 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் - 1301 வாக்குகளும் பெற்று டெபாசிட்டை இழந்தனர்.

17:41 March 02

வெளியான 14ஆவது சுற்று முடிவு - ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி உறுதி

ஈரோடு கிழக்கில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.தற்போது, தபால் வாக்குகளுடன் சேர்த்து 14சுற்றுகளில் மொத்தமாக எண்ணப்பட்ட வாக்குகளில் காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்.

காங்கிரஸ் - 1,04,907

அதிமுக - 41,666

63,241 வாக்குகள் பெற்று காங்கிரஸ் முன்னிலை

இன்னும் எண்ணப்படவேண்டிய மொத்த வாக்குகளின் எண்ணிக்கையினை விட, முன்னிலை எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், வெற்றி உறுதியாகியுள்ளது.

17:16 March 02

ஈரோடு கிழக்கு - 13ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை

தபால் வாக்குகளுடன் சேர்த்து 13 சுற்றுகளில் மொத்தமாக எண்ணப்பட்ட வாக்குகளில் காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:

காங்கிரஸ் 97,729

அதிமுக 38,790

58,939 வாக்குகள் பெற்று காங்கிரஸ் முன்னிலை

16:26 March 02

11ஆவது சுற்று முடிவு- 'வர்றலாம்... வர்றலாம் வா...'

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 11ஆவது சுற்று முடிவில் காங்கிரஸ்: 83,625 வாக்குகளும்; அதிமுக: 32,340 வாக்குகளும் பெற்றுள்ளது.

இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இருக்கும் வாக்கு வித்தியாசம் 51,000-ஐ தாண்டி உள்ளது

15:31 March 02

10வது சுற்று முடிவு - வாக்குகளை அள்ளிய ஈவிகேஎஸ் இளங்கோவன்

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 76,557 வாக்குகள் பெற்றுள்ளார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசு 28,545 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுகவை விட காங்கிரஸ் வேட்பாளர் 48ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார். தற்போது 28,300 வாக்குகள் அதிகமாக பெற்றதால், அதிமுக வேட்பாளர் டெபாசிட்டை தக்கவைத்துள்ளார்.

14:17 March 02

9ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு - தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை 9ஆவது சுற்று முடிந்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 70,299 வாக்குகள் பெற்றுள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசு 24,985 வாக்குகளை பெற்றுள்ளது. வாக்குகள் வித்தியாசம் வித்தியாசம் 45,314 ஆகும்.

13:54 March 02

8ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 8ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முந்தைய 7 சுற்றுகளிலும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

13:44 March 02

திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் கட்சி வெற்றியை நெருங்கி வரும் நிலையில், சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், திராவிட மாடல் ஆட்சியை சிறப்போடு நடத்த வேண்டும் என்று மக்கள் ஆதரவை வழங்கியுள்ளனர். 20 மாதகால திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் இது எனத் தெரிவித்தார்.

12:47 March 02

ஏழாம் சுற்று முடிவில் 33,612 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் ஏழாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் 53,548 வாக்குகளையும், அதிமுக 19,936 வாக்குகளையும் பெற்றுள்ளது. அந்த வகையில், 33,612 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

12:34 March 02

7ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

7ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காங்கிரஸ் 46,425 வாக்குகள் பெற்றுள்ளது. அதிமுக 16,942 வாக்குகள் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி 3,086 வாக்குகளையும், தேமுதிக 440 வாக்குகளையும் பெற்றுள்ளது.

12:05 March 02

"ஜனநாயகம் தோற்றுவிட்டது" - வெளியேறிய அதிமுக வேட்பாளர்

வெளியேறிய அதிமுக வேட்பாளர்

வாக்கு எண்ணும் மையத்தை விட்டு அதிமுக வேட்பாளர் தென்னரசு இருண்ட முகத்தோடு வெளியேறினார். அப்போது அவர், பணநாயகம் ஜெயித்தது. ஜனநாயகம் தோற்றுவிட்டது என்று கூறி விட்டு புறப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் முன்கூட்டியே கிளம்பிவிட்டார்.

11:48 March 02

5ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்

முதல் 4 சுற்றிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்த நிலையில், 5ஆவது சுற்றிலும் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில் 36,723 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 12,297 வாக்குகள் பெற்றுள்ளார்.

11:43 March 02

ஈரோடு தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலுக்கு எடுத்துக்காட்டு - ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு எடுக்காட்டு என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

11:34 March 02

4ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்

நான்காம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 31,891 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 10,616 வாக்குகள் பெற்றுள்ளார்.

11:13 March 02

4ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை 3 சுற்றுகள் முடிவந்தது. 4ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 3ஆம் சுற்று முடிவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 27,843 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

10:38 March 02

3ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

3ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட வந்த நிலையில் மீண்டும் தொடங்கியது.

10:07 March 02

ஈவிகேஸ் இளங்கோவன் 17,417 வாக்குகள் உடன் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 17,417 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

09:54 March 02

அண்ணா அறிவாலயத்தில் கூடும் தொண்டர்கள்

அண்ணா அறிவாலயம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் கூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

09:47 March 02

அதிமுக தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது

அதிமுக தலைமை அலுவலகம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

09:45 March 02

மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது.

09:37 March 02

2 சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 2ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 19,223 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 6,497 வாக்குகள் பெற்று பின்னடைவு சந்தித்து வருகிறார்.

09:23 March 02

காங்கிரஸ் 14,631 வாக்குகள் பெற்று முன்னிலை

இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. அதில் காங்கிரஸ் வேட்பாளர் 14,631 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

09:20 March 02

இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

09:16 March 02

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முதல் சுற்று வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

09:08 March 02

காங்கிரஸ் வேட்பாளர் 10,952 வாக்குகள் உடன் தொடர்ந்து முன்னிலை

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 10,952 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

08:54 March 02

காங்கிரஸ் வேட்பாளர் 5,629 வாக்குகளுடன் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 5,629 வாக்குகளுடன் முன்னிலை வகித்துவருகிறார்.

08:45 March 02

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் 3758 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 1,472 வாக்குகள் பெற்றுள்ளார்.

08:24 March 02

83 வாக்குகள் பெற்று காங்கிரஸ் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தபால் வாக்குகளில் காங்கிரஸ் 83 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. அதிமுக வேட்பாளர் 37 வாக்குகள் பெற்றுள்ளார்.

08:21 March 02

காங்கிரஸ் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

08:00 March 02

தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன

தபால் வாக்குகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமாக 397 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன.

07:53 March 02

தபால் ஓட்டுப்பெட்டி திறப்பட்டது

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் அடங்கிய பெட்டி திறக்கப்பட்டது.

07:49 March 02

வாக்கு எண்ணும் அறைக்கு மின்னணு எந்திரங்கள் கொண்டுவரப்படுகின்றன

மின்னணு எந்திரங்கள் அறை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சற்று நேரத்தில் தொடக்க உள்ளது. அதற்காக ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு அங்குள்ள வாக்கு இயந்திரங்களை எடுத்து வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டுவரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

07:42 March 02

அரசியல் கட்சி முகவர்களுக்கு தீவிர சோதனை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணும் மையத்துக்குள் செல்லும் பணியாளர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் தீவிர சோதனைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

06:54 March 02

மொத்தம் 397 தபால் வாக்குகள் பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 397 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன

06:39 March 02

அதிமுக வேட்பாளர் தென்னரசு வருகை

அதிமுக வேட்பாளர் தென்னரசு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரிக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு வருகை தந்துள்ளார்.

06:39 March 02

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மார்ச்.2) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 15 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Last Updated :Mar 2, 2023, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details