தமிழ்நாடு

tamil nadu

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

By

Published : Jan 17, 2023, 7:19 AM IST

கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணையில் பொங்கல் விடுமுறையொட்டி, குவிந்த சுற்றுலா பயணிகள் அணையில் குளித்தும், படகு செய்தும் மகிழ்ந்தனர்.

Etv Bharat
Etv Bharat

Kodiveri Dam: கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஈரோடு மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றானது, கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை(Kodiveri Dam). இந்த கொடிவேரி அணையில் நீர் அருவியைப் போல, கொட்டுவதால் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

அந்த வகையில், பொங்கல் விடுமுறையையொட்டி (Pongal Festival), நேற்று (ஜன.16) ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த கொடிவேரி அணையில் வந்து தங்களது பொழுதைக் களித்தனர். அருவியைப் போல, கொட்டும் நீரில் தங்களது குடும்பத்துடன் குளித்த மகிழ்ந்த அவர்கள், அதனைத்தொடர்ந்து அங்கிருந்த படகுகளிலும் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அணை பண்டிகை காலங்கிலும், விடுமுறை தினங்களிலும் மூடப்பட்டிருந்தது. பொங்கல் பண்டிகையையொட்டி, தொடர் விடுமுறை என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் காலை முதலே கொடிவேரி அணைக்கு வந்த கொண்டுள்ளனர். மேலும், அணையில் அருவிபோல கொட்டும் நீரில் தங்கள் குடும்பத்துடன் உற்சாக குளியலிட்டும், கடற்கரை போல அமைந்துள்ள மணலில் அமர்ந்து அங்கு விற்ற பொறித்த மீன்களை வாங்கி உண்டும் மகிழ்ந்தனர்.

இதனைத்தொடர்ந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பரிசல் பயணம் மேற்கொண்டும் வருகின்றனர். மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் வழி நெடுக்கிலும் ஏராளமான கார்கள், இருசக்கர வாகனங்கள் அணிவகுதத்து நின்றன. மேலும், கொடிவேரி அணைக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி அணையை சுற்றிலும் கடத்தூர் மற்றும் பங்களாபுதூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: 2023 Trichy Suriyur Jallikattu:சூரியூரில் 17 காளைகளை அடக்கியவருக்கு பைக் பரிசு

ABOUT THE AUTHOR

...view details