தமிழ்நாடு

tamil nadu

பவானி ஆற்றில் வெள்ளம்: கொடிவேரி அணையில் குளிக்கத் தடை!

By

Published : Dec 22, 2022, 10:43 AM IST

பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கொடிவேரி அணை பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடிவேரி அணையில் குளிக்கத் தடை
கொடிவேரி அணையில் குளிக்கத் தடை

ஈரோடு: பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை நெருங்குகிறது. இதனால் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். பெரிய கொடிவேரி அணையில் வெள்ளநீர் தடுப்பு சுவரை தாண்டி தண்ணீர் செல்லும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் பவானி ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details