தமிழ்நாடு

tamil nadu

ஈரோடு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பணி ஒதுக்கீடு

By

Published : Apr 24, 2021, 4:14 PM IST

ஈரோடு: வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பணியை கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடுசெய்து மாவட்டத் தேர்தல் அலுவலர் தொடங்கிவைத்தார்.

ஈரோடு வாக்கு எண்ணும் மையம்
ஈரோடு வாக்கு எண்ணும் மையம்

ஈரோடு மாவட்டத் தேர்தல் அலுவலர் கதிரவன் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பணியை கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடுசெய்தார்.

வாக்கு எண்ணும் மையம்

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமாக சித்தோட்டில் உள்ள சாலைப் போக்குவரத்து மற்றும் பொறியியல் கல்லூரியும், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமும் கோபிசெட்டிபாளையம் அரசு கலைக் கல்லூரியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளர்களின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தொகுதிவாரியாகத் தனித்தனி பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு சீல்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று (ஏப். 23) வாக்கு எண்ணும் மையத்தில் பணிகளை மேற்கொள்ளும் நுண்பார்வையாளர்கள், மேற்பார்வையாளர்கள், உதவியாளர்களுக்கான பணி ஒதுக்கீட்டினை இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் கணிணி சுழற்சி முறையில் மாவட்டத் தேர்தல் அலுவலர் கதிரவன் தொடங்கிவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details