தமிழ்நாடு

tamil nadu

காந்தி கோயிலில் அபிஷேகம் - அமைச்சர் பங்கேற்பு!

By

Published : Oct 2, 2020, 8:23 PM IST

கோபிசெட்டிபாளையம் அருகே அமைக்கப்பட்ட காந்தி சிலைக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டார்.

காந்தி கோயிலில் அபிஷேகம்
காந்தி கோயிலில் அபிஷேகம்

ஈரோடு: காந்தி பிறந்த நாளான இன்று(அக் 2) கவுந்தப்பாடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காந்தி கோயிலில் அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலையில் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி செந்தாம்பாளையத்தில் வையாபுரி என்பவர் 1997 ஆண்டு மகாத்மா காந்திக்கும் அன்னை கஸ்தூரி அம்மையாருக்கும் தனித்தனி சன்னதி அமைத்து மகாத்மா காந்தி கோயிலை கட்டினார்.

இக்கோவிலில் ஆண்டுதோறும், குடியரசு தினம் (ஜன 26), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), காந்தி ஜெயந்தி (அக். 2) ஆகிய மூன்று முக்கிய நாளில், காந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். தினந்தோறும் சன்னதியில் பூஜைகள் நடைபெறும்.

இதையடுத்து இன்று(அக்.2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தி சிலைக்கும், கஸ்தூரிபா அம்மையாரின் சிலைக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. புனித நீர் ஊற்றி, மந்திரம் முழங்க அபிஷேகம், ஆராதனை நடைப்பெற்றது.

அதனை தொடர்ந்து காந்தி சிலைக்கு கதர் ஆடை, கண் கண்ணாடி அணிவித்து, விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்யப்பட்டடு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் கே.சி.கருப்பணன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, பின்னர் சிறப்பு பூஜையில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதையும் படிங்க: ஹத்ராஸ் பெண்ணின் வழக்கில் களமிறங்கிய நிர்பயா வழக்குரைஞர்!

ABOUT THE AUTHOR

...view details