தமிழ்நாடு

tamil nadu

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: சிறப்புச் சலுகை விரைவில் அறிவிக்கப்படும்

By

Published : Jan 24, 2020, 10:45 AM IST

ஈரோடு: 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கும் சிறப்பு குழந்தைகளுக்கு தேர்வில் சலுகை அளிப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவுசெய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

minister sengottaiyan
minister sengottaiyan

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்துகொண்டார். அப்போது, எரிபொருள் சேமிப்பு, சாலை விதிகளைக் கடைப்பிடித்த அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கிளை மேலாளர், பணியாளர்கள் என 240 பேரை பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "5, 8ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வில் பங்கேற்கும் சிறப்பு குழந்தைகளுக்கு தேர்வில் சலுகை அளிப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும். பத்து, பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் வருகைப்பதிவு 75 விழுக்காடு இருக்க வேண்டும்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளின் வருகை பதிவேட்டை அரசு கண்காணிக்கும். அரசு நீட் தேர்வு மையம் தொடங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: பக்கத்து கடையிலிருந்து காசு எடுக்கலாம் - ஃபோன்பே ஏடிஎம்

Intro:Body:tn_erd_05_sathy_public_exam_vis_tn10009

5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேறகும் சிறப்பு குழந்தைகளுக்கு தேர்வில் சலுகை அளிப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும். பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் அரசு தனியார் பள்ளி மாணவர்களின் வருகை பதிவு 75 சதவிகிதம் இருக்க வேண்டும் தனியார் பள்ளிகளின் வருகை பதிவேட்டை அரசு கண்காணிக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கோபிசெட்டிபாளைத்தில் தெரிவித்துள்ளார்


ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று எரிபொருள் சேமிப்பு மற்றும் சாலை விதிகளை கடைபிடித்த அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கிளை மேலாளர் மற்றும் பணியாளர்கள் என 240 பேர்களை பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தார். இவ்விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் உயரை பயணம் வைத்து ஓட்டுநர்கள் பயணிகளை பத்திரமாக அழைத்து செல்கின்றனர். அதனிலும் அரசின் பொருளாதாரநிலையை மேம் படுத்த எரிபொருள் கிக்களத்தையும் கடைபிடித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது அரசு போகுவரத்து கழக ஊழியர்கள் பல இடர்பாடுகளுக்கு இடையிலும் நல்லமுறையில் செயல்பட்டுவருகின்றனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் விபத்து குறைவான மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. 5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேறகும் சிறப்பு குழந்தைகளுக்கு தேர்வில் சலுகை அளிப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும். பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் அரசு தனியார் பள்ளி மாணவர்களின் வருகை பதிவு 75 சதவிகிதம் இருக்க வேண்டும் தனியார் பள்ளிகளின் வருகை பதிவேட்டை அரசு கண்காணிக்கும். அரசு நீட் தேர்வு மையம் துவங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
பேட்டி:
திரு.கே.ஏ.செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…
Conclusion:

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details