தமிழ்நாடு

tamil nadu

நான்கு வயது சிறுமியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

By

Published : Aug 22, 2019, 7:16 PM IST

திண்டுக்கல்: நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

youngman get lifesentence for child rap case in dindugal

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள செம்மண் களத்து வீடு பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி கடந்த வார புதன் கிழமை தனது பாட்டியுடன் அங்கன்வாடிக்கு சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த குப்பம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற வாலிபர் பாட்டியையும், சிறுமியும் அங்கன்வாடியில் விட்டுவிடுவதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், பாட்டியை வழியில் இறக்கிவிட்டு சிறுமியை அருகிலுள்ள கிணத்துப்பட்டி மலைப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளார். கொலையை மறைப்பதற்காக சிறுமி உடல் மீது கற்கள் மற்றும் செடிகளை போட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

4வயது சிறுமியை வன்புறுத்தி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

இதுகுறித்து வேடசந்தூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சிவகுமார், ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இளம் சிறார் நீதி குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டது. கொலையாளி ராஜ்குமாருக்கு 17 வயது என்றாலும் அவர் நல்ல உடல் நிலையோடு சுய சிந்தனையோடு தனது குற்றத்தை செய்திருப்பதற்கான மருத்துவ, உளவியல் நிபுணர்களின் ஆதாரங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. ராஜ்குமார் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டதால் நீதிபதி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details