தமிழ்நாடு

tamil nadu

பேருந்து மீது பைக் மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு

By

Published : Aug 1, 2021, 3:43 PM IST

கொடைக்கான‌லில் பேருந்து மீது இருக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

பேருந்து மீது பைக் மோதி விபத்து
பேருந்து மீது பைக் மோதி விபத்து

திண்டுக்க‌ல்: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிலால். இவரது நண்பர் முகமது சபீக். இருவரும், சுற்றுலாவிற்காக இருசக்கர வாகனத்தில் கொடைக்கானலுக்கு சென்றனர்.

செண்ப‌க‌னூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலை த‌டுமாறி எதிரே வந்த த‌னியார் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

ஒருவர் உயிரிழப்பு

இந்த விபத்தில் இருச‌க்கர வாக‌ன‌த்தின் பின் புற‌த்தில் அமர்ந்திருந்த பிலால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த முகமது சபீக்கை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறை விசாரணை

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், உயிரிழந்த பிலால் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் : இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்து - மூவர் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details