தமிழ்நாடு

tamil nadu

காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இளம்பெண்

By

Published : Nov 9, 2020, 5:53 PM IST

திண்டுக்கல்: காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவரது மனைவி குஷ்பு (28). இவர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தனது மகள் சுவேதா (4) மற்றும் தாயார் வள்ளியம்மாள் ஆகியோருடன் இன்று(நவ.09) சென்றார்.

அப்போது கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைக் கண்ட பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் குஷ்பூ உடலில் தண்ணீர் ஊற்றி அவரை மீட்டனர்.

இதுகுறித்து குஷ்பு கூறுகையில், "எங்களுக்கு சொந்தமான நிலத்தில் எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவர் போலி பத்திரம் தயாரித்து ஆக்கிரமித்துள்ளார். அவர் மீது காவல் துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றேன்" எனத் தெரிவித்தார். இளம்பெண் ஒருவர் திடீரென்று காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கொடைக்கானலில் சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details