தமிழ்நாடு

tamil nadu

மாற்றுத்திறனாளி மகனுக்கு உதவுவதாகக் கூறி பாலியல் தொந்தரவு அளிப்பதாக பெண் புகார்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 11:59 AM IST

Sexual harassment issue: கணவனை இழந்த பெண்ணிற்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு தருவதாக திமுக பிரமுகர் மீது ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்துள்ளார்.

sexual harassment issue
திமுக பிரமுகர் பாலியல் தொந்தரவு தருவதாக பெண் கண்ணீர் மல்க புகார்

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மேலும் இவருடைய கணவர் இறந்து பத்து வருடங்கள் ஆன நிலையில், இவர் கூலி வேலை செய்து தனது 2 குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரபு என்ற நபரிடம், அந்த பெண் தனது ஊனமுற்ற மகனுக்கு மிதிவண்டி அல்லது ஏதாவது உதவி செய்து தரும்படி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் பெண்ணின் மொபைல் நம்பரை பெற்றுக் கொண்ட பிரபு, அவருக்கு தொடர்ந்து செல்போனில் அழைப்பு விடுத்தும், அடிக்கடி பாலியல் வன்புணர்வு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அதன்பின், அப்பெண் அவரது மொபைல் நம்பரை பிளாக் லிஸ்டில் போட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, பிரபு கடந்த சில தினங்களாக வீடியோ காலில் தொடர்பு கொள்வதும், பேசுவதும், வாட்ஸ் அப்பில் ஆபாச படங்களை அனுப்புவதும், ஆபாசமான வார்த்தைகளில் பேசுவதும், அவரது ஆபாச புகைப்படங்களை அனுப்புவதுமென தொடர்ந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறுகின்றார்.

மேலும் தான் திமுக பிரமுகர் என்றும், தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும், அதனால் நீ என் ஆசைக்கு இணங்க வேண்டும், அப்படி இணங்காவிட்டால் உன்னை கொன்று விடுவேன் என்றும், உன் பிள்ளைகள் அனாதையாகிவிடும் என்றும் மிரட்டல் விடுத்ததாக கூறுகின்றனர்.

இதனால் அப்பெண், ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வேண்டியும், தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு தரக்கூடிய பிரபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: சுற்றுலாவின்போது வழி தவறிய உ.பி மூதாட்டி.. உறவினர்களுடன் சேர்த்த கடலூர் போலீசார்!

ABOUT THE AUTHOR

...view details