தமிழ்நாடு

tamil nadu

'கண்டு ரசிக்க... பரந்துவிரிந்த ரோஜா பூங்காவைத் திறங்க!'

By

Published : Aug 3, 2021, 9:51 AM IST

கொடைக்கானலில் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான ரோஜா பூங்காவைத் திறக்க வேண்டுமெனச் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கண்டு ரசிக்க... பரந்துவிரிந்த ரோஜா பூங்காவைத் திறங்க
கண்டு ரசிக்க... பரந்துவிரிந்த ரோஜா பூங்காவைத் திறங்க

திண்டுக்கல்: கொடைக்கானலில் நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் கொடைக்கானலில் நுழைவு வாயில் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.

தொடர்ந்து கொடைக்கானலில் வனத் துறை கட்டுப்பாட்டில் மட்டுமே முக்கியச் சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளன. ஆனால் சுற்றுலா இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து கடந்த மாதம் பூங்காக்கள் திறக்கப்பட்டு மறுநாளே மூடப்பட்டன.

இதில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ரோஜா பூங்கா அமைந்துள்ளது.

கண்டு ரசிக்க... பரந்துவிரிந்த ரோஜா பூங்காவைத் திறங்க

இந்த இடம் பெரிய பரப்பளவாக இருப்பதால் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்க முடியும். பல்வகையான ரோஜா பூவை கண்டு ரசித்துச் செல்ல முடியும். ஆகவே தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான ரோஜா பூங்காவைத் திறக்க வேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கொடைக்கானலில் அவ்வப்போது மழை: வெள்ளைப்பூண்டு வேளாண்மை பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details