தமிழ்நாடு

tamil nadu

அதிமுகவிற்கு வாக்களிக்க வீடு வீடாக பணப் பட்டுவாடா: சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவும் வீடியோ

By

Published : Apr 3, 2021, 6:23 PM IST

திண்டுக்கல்: அதிமுகவிற்கு வாக்களிக்கும்படி வீடு வீடாகச் சென்று பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவுகிறது.

money
money

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். இவர் தொகுதியில் அதிமுகவிற்கு வாக்களிக்கும்படி கூறி, தலா ரூ. 1000 வீதம் வழங்கப்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

வீடு வீடாகப் பணப் பட்டுவாடா

இதற்கிடைய திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு அதிமுக நிர்வாகி ஒருவர் பணம் கொடுக்க வந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் செல்போனில் படம் எடுத்தார்.

பின் அவரிடம் விசாரிக்கவே அந்த நபர் அங்கிருந்து நைஸாக தப்பிச் சென்றுவிட்டார். இந்த வீடியோவை அந்த இளைஞர் சமூக வலைதளத்தில் பதிவிடவே தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details