தமிழ்நாடு

tamil nadu

பழனி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா

By

Published : Nov 5, 2021, 9:05 AM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. வரும் நவ.9ம் தேதி சூரசம்ஹாரமும், வரும் நவ.10ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

பழனி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா
பழனி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா

திண்டுக்கல் மாவட்டம் பழனி் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா உச்சிக்கால பூஜையின் போது மூலவருக்கு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது.

விநாயகர், மூலவர், சண்முகர் துவங்கி துவாரபாலகர், துவஜஸ்தம்பம், நவவீரர்கள் என அனைத்து பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு காப்பு கட்டப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பூஜை நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பூஜை முடிந்த பின் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பழனி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா

ஒருவாரம் நடைபெறும் மண்டகப்படி நிகழ்ச்சிகளும் திருக்கோயில் சார்பாகவே நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்ச்சியாக வரும் நவ.9 ம் தேதி சூரசம்ஹாரமும், நவ.10ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

நவ.9 ம் தேதி காலை 11 மணிக்கு மேல் பக்தர்களுக்கு மலைக்கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி இல்லை. அதே போல மாலையில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கும், மறுநாள்று (நவ.10) காலை மலைக்கோயிலில் நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நிகழ்ச்சிகளை இணையதளம் வழியாக காண திருக்கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

இதையும் படிங்க : துலா உற்சவம்; அமாவாசை தீர்த்தவாரி... தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு

ABOUT THE AUTHOR

...view details