தமிழ்நாடு

tamil nadu

ஒட்டன்சத்திரம் மாட்டு சந்தை: 'அதிக கட்டணம் வசூல் தொடர்பாக நடவடிக்கை'

By

Published : Nov 27, 2022, 7:25 AM IST

ஒட்டன்சத்திரம் மாட்டு சந்தையில் அதிக கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

திண்டுக்கல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டமானது மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் நேற்று (நவ. 26) நடைபெற்றது. இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்பு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார். ஒட்டன்சத்திரம் மாட்டு சந்தையில் அதிக கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.

ஆலோசனைக் கூட்டம்

இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தனக்கும் தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஒட்டன்சத்திரம் நகராட்சி நிர்வாகத்துடன் கலந்து ஆலோசனை செய்யப்படும். கட்டணம் வசூல் செய்யும் உரிமம் பெற்றவர்களை அழைத்து எச்சரிக்கை செய்யப்படும்.

அதையும் மீறி தொடர்ந்து கூடுதலாக வசூல் செய்தால் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: எலியின் மரணத்திற்கு நீதி வேண்டும்.. விலங்கு நல பிரியர் புகார்

ABOUT THE AUTHOR

...view details