தமிழ்நாடு

tamil nadu

வயரில் உரசி தீப்பிடித்த லாரி - 3 மணி நேரம் தீயணைப்புத் துறையினர் போராட்டம்

By

Published : Feb 11, 2020, 1:56 PM IST

திண்டுக்கல்: கால்நடை தீவனம் ஏற்றிச்சென்ற லாரி உயர் அழுத்த மின்சார வயரில் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது.

தீயணைப்பு துறை
தீயணைப்பு துறை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எம்.களத்தூர் பகுதியிலுள்ள மக்கள் மானாவாரி பயிரான வெள்ளைசோளம் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அறுவடைக்கான நேரம் என்பதால் அதை கால்நடை தீவனத்திற்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவது வழக்கமான ஒன்றாகும்.

இந்நிலையில், சேலத்தில் பாண்டம் மண்டலத்தைச் சேர்ந்த ரெங்கராஜ் என்பவருக்குச் சொந்தமான லாரியில் கால்நடைகளுக்காகச் சோளத்தட்டைகளை அதிகளவில் ஏற்றிக்கொண்டு அந்த லாரி சேலத்திற்கு புறப்பட்டது. அப்போது அதே வயலிலுள்ள உயர் மின்னழுத்த வயரில் உரசியதில் லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

வயரில் உரசி தீப்பிடித்த லாரி

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த குஜிலியம்பாறை, அரவக்குறிச்சி தீயணைப்புத் துறையினர் மூன்று மணி நேரமாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில், லாரி, கால்நடை தீவனம் முழுவதும் எரிந்து நாசமாகின.

இதையும் படிங்க: கஞ்சா விற்ற 17வயது சிறுவன் கைது!

ABOUT THE AUTHOR

...view details