தமிழ்நாடு

tamil nadu

தொடர் மழையால் அழுகும் காய்கறிகள் - கொடைக்கானல் விவசாயிகள் கவலை

By

Published : Dec 11, 2020, 3:58 PM IST

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள் அழுகி வருவதாக விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்

மழையால் அழுகிய பயிர்கள்
மழையால் அழுகிய பயிர்கள்

திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இங்குள்ள மக்களுக்கு விவசாயமே பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது. கொடைக்கானலைச் சுற்றியுள்ள பள்ளங்கி, அட்டுவம்பட்டி, வில்பட்டி, பூம்பாறை, தாண்டிக்குடி, மன்னவனூர், செண்பகனூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் காலநிலைக்கு ஏற்ப பயிர்களை விதைத்து அக்கிராம மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்போது பீன்ஸ், முட்டை கோஸ், கேரட், உருளைக்கிழங்கு, பட்டாணி உள்ளிட்ட காய்கறிகளின் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த மழையால், பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி அழுகி வருவதாக, விவசாயிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

தொடர் மழையால் அழுகும் காய்கறிகள்

மேலும், மழையிலிருந்து பாதுகாக்கப்பட்ட காய்கறிகளும் குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுவரை மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை அலுவலர்கள் பார்வையிடவில்லை என குற்றஞ்சாட்டிய விவசாயிகள், தமிழ்நாடு அரசு தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:வாய்க்கால்கள் தூர்வாரப்படாததே பயிர் சேதத்திற்கு காரணம் - நாகை எம்.பி.

ABOUT THE AUTHOR

...view details