தமிழ்நாடு

tamil nadu

கொடைக்கானலில் டென்ட் கூடார கலாசாரம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

By

Published : Jul 30, 2021, 9:38 PM IST

கொடைக்கானலில் அனுமதி பெறாமல் வனப்பகுதிக்கு அருகே டென்ட் கூடாரம் அமைத்து தங்கும் சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் டென்ட் கூடார கலாசாரம்
கொடைக்கானலில் டென்ட் கூடார கலாசாரம்

திண்டுக்கல்: கொடைக்கானல் மலை கிராமங்களான பள்ளங்கி, பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட கிராமங்களில் வனப்பகுதி ஒட்டியும் அரசின் அனுமதி பெறாமல் விவசாய நிலம், வருவாய் நிலத்தில் டென்ட் கூடாரம் அமைத்து சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது.

டென்ட் கூடாரத்திற்கு கர்நாடக, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வருகைபுரிந்து அதிகமாகத் தங்கிவருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமலும் அனுமதிக்கப்படுகின்றனர்.

வனப்பகுதியை ஒட்டி வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் கூடாரங்கள் அமைக்கப்படுவதால் இரவு நேரத்தில் டென்ட் கூடாரத்தில் தங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து நேரிடும் இடரும் இருந்துவருகிறது.

தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் டென்ட் கலாசாரம் தொடங்கியுள்ளது. இதனைக் காவல், வருவாய், வனம் ஆகிய துறைகளின் அலுவலர்கள் கவனம் செலுத்தி அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் அனுமதியின்றி டென்ட் கூடாரம் அமைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details