தமிழ்நாடு

tamil nadu

கரோனா தொற்று பரவல்: கொடைக்கானல் கோடைவிழா குறித்து மக்கள் மத்தியில் கேள்வி!

By

Published : Apr 14, 2021, 3:02 PM IST

திண்டுக்கல்: கரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக கொடைக்கானலில் கோடை விழா நடைபெறுமா என்ற கேள்வி சுற்றுலா பயணிகளுக்கு மத்தியில் எழுந்துள்ளது.

kodaikanal
kodaikanal

தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவிவருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. கொடைக்கானலில் வழக்கமாக மே மாதம் இறுதியில் கோடை விழா, மலர் கண்காட்சி நடைபெறும். இதனை காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகல் வருகை தருவர்.

கடந்தாண்டு கரோனா தொற்று காரணமாக இந்த நிகழ்சிகள் அரசால் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், தற்போதும் கரோனா தாக்கம் அதிகரித்து ருவதால் கோடை விழா, மலர் கண்காட்சி ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் சுற்றுலாவை நம்பியே உள்ளது.

கொடைக்கானல் கோடைவிழா

இந்தாண்டும் கோடை விழா, மலர் கண்காட்சி கடந்தாண்டை போலவே ரத்து செய்யப்படுமா அல்லது நடக்குமா என்ற குழப்பம் சுற்றுலாவாசிகளிடமும் பொதுமக்களிடமும் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு இதை ரத்து செய்யமால் சில கட்டுப்பாடுகளுடன் கோடை விழாவிற்கு அனுமதி அளிக்க வேண்டுமேன கொடைக்கானல் வாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details