தமிழ்நாடு

tamil nadu

”இன்னும் அரை மணி நேரத்திற்கு இது எங்க கோயில்” - பழனியில் அட்ராசிட்டி செய்த இந்து அமைப்பினர்

By

Published : Oct 4, 2022, 10:07 PM IST

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி வேல் வாங்கும் நிகழ்ச்சியில் சித்தர் ஒருவரை உள்ளே விட வேண்டும் என சூப்பிரண்டிடம் இந்து அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பழனி முருகன் கோயிலில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர்
பழனி முருகன் கோயிலில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர்

திண்டுக்கல்:அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நவராத்திரி விழா கடந்த 26ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஒன்பது நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை 10 மணிக்கு, கோயில் நடை கீழே அடைக்கப்பட்டு 12 மணிக்கு அனைத்து டிக்கெட்டுகளும் நிறுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பராசக்தி வேல் வாங்கும் நிகழ்வின் போது, புலிப்பாணி சித்தர் சாமிகள் உள்ளே செல்ல முயன்ற போது கோயிலின் சூப்பிரண்டு சந்திரமோகன் தடுப்புகளை வைத்து மறைத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் சிலர் சூப்பிரண்டிடம் “இன்னும் அரை மணி நேரத்திற்கு இந்த கோயில் எங்க கோயில்” என தடுப்பை நீக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு சூப்பிரண்டு அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் என கூற, ஒன்று திரண்ட இந்து அமைப்பினர் ”இது வேறு யாருடைய கோயில் எங்கள் கோயில் தான், தேவஸ்தானம், நிர்வாகம் மட்டுமே செய்ய வேண்டும்”, கூறி இந்து அமைப்பினர் வாக்குவாததில் ஈடுபட்டனர்.

மேலும் கோயில் இணை ஆணையர் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும், என கூறினர். ஆனால், பேஸ்கார் என்று சொல்ல கூடிய உள்துறை அலுவலரைை அனுப்பி வைத்துள்ளனர். இதனால் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு சமாதானப்படுத்தி, பின்னர் வேல் வாங்கும் நிகழ்வு சுமூகமாக நடைபெற்றது.

பழனி முருகன் கோயிலில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர்

இதையும் படிங்க:மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் நவராத்திரிவிழா

ABOUT THE AUTHOR

...view details