தமிழ்நாடு

tamil nadu

Video: பயிர்களை தின்ற மாட்டை விரட்டியதால் கோபம்... விவசாயியை தாக்கிய தம்பதி!

By

Published : Feb 6, 2023, 8:57 AM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே, தனது விவசாய நிலத்தில் மாடு மேய்ந்ததை கண்டித்த விவசாயியை ஒருவர் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

விவசாய நிலத்தில் மேய்ச்சல்.. விவசாயி மீது இளைஞர் தாக்குதல்!
விவசாய நிலத்தில் மேய்ச்சல்.. விவசாயி மீது இளைஞர் தாக்குதல்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே, தனது விவசாய நிலத்தில் மாடு மேய்ந்ததை கண்டித்த விவசாயியை இளைஞர் ஒருவர் தாக்கும் வீடியோ

திண்டுக்கல்:அம்மையநாயக்கனூர் கிழக்குத் தோட்டம் சிறுமலை அடிவாரப் பகுதியில் தர்மநாதன் (55) என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்தவர் பிட்டர் ஜேசு என்பவரது மகன் டேவிட் (38). இந்த நிலையில் நேற்று (பிப்.5) காலை டேவிட்டின் மாடு ஒன்று, தர்மநாதனின் விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை தின்று சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

பயிர்களை மேய்ந்த மாட்டை விவசாயி தர்மநாதன் துரத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டேவிட் மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும், தர்மநாதனை எட்டி உதைத்து கடுமையாக தாக்கினர். அப்போது இதனை தடுக்கச் சென்ற தர்மநாதனின் மனைவியையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

அதேநேரம் தனது தாய், தந்தையை தாக்கப்படும் சம்பவத்தை, அவர்களது மகள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். வீடியோ எடுப்பதை டேவிட் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சிறுமியையும் தாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தர்மநாதன் குடும்பத்தினர், அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இச்சம்பவம் தொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க:மதுபோதையில் மனைவி மீது தாக்குதல் - முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details