தமிழ்நாடு

tamil nadu

மது போதையில் தகராறு; ஒருவர் பலி, கொலையாளி கைது

By

Published : Aug 17, 2019, 5:32 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானலில் முன்விரோதம் காரணமாக இரண்டு குடிமகன்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்டு ஒருவர் உயிரிழந்த வழக்கை விசாரித்த போலீசார், கொலையாளியை கைது செய்தனர்.

கொலையாளி கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்துள்ள தாண்டிக்குடியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார், சக்திவேல். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததும், நேற்று இரவு இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக்கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில்குமாரை வயிறு, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார். இதில் ஏற்பட்ட ஆழமான காயத்தினால் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொடைக்கானலில் கொலையாளி கைது
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய தாண்டிக்குடி காவல் துறையினர், ஒட்டன்சத்திரம் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் ஒட்டன்சத்திரம் வனத்துறை சோதனைச்சாவடி அருகே சத்திவேலை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் சக்திவேல் ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஒப்படைக்கபட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Intro:திண்டுக்கல். 17.08.19
பதிலி செய்தியாளர் எம்பூபதி

கொடைக்கானல் தாண்டிக்குடி அருகே குடிபோதையில் ஒருவர் கொலை. தப்பி வந்த கொலையாளியை ஒட்டன்சத்திரம் வனப்பகுதி சோதனைச்சாவடியில் வைத்து எஸ்.பி போலீசார் கைது செய்தனர்.
Body:திண்டுக்கல். 17.08.19
பதிலி செய்தியாளர் எம்பூபதி

கொடைக்கானல் தாண்டிக்குடி அருகே குடிபோதையில் ஒருவர் கொலை. தப்பி வந்த கொலையாளியை ஒட்டன்சத்திரம் வனப்பகுதி சோதனைச்சாவடியில் வைத்து எஸ்.பி போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்து உள்ளது தாண்டிக்குடி .தாண்டிக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான மன்ற கால்வாய் மலை கிராமப் பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மகன் செந்தில்குமார் 40. இவரும் இதே பகுதியை சேர்ந்த அழகர் சாமி மகன் சக்திவேல் 45 ,இருவரும் நேற்று இரவு அதிகமான மது குடித்ததாக கூறப்படுகிறது.

இவர்களுக்குள் அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது .

முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு இருவரும் அளவுக்கு அதிகமாக மது குடித்தவுடன் ஒருவருக்கு ஒருவர் மது போதையில் சண்டை செய்துள்ளனர் .

இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில்குமாரை குத்தியுள்ளார் .வயிறு நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட ஆழமான கத்திக்குத்து காரணமாக செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது பற்றி தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .

இந்நிலையில் செந்தில் குமாரை கொலை செய்துவிட்டு சக்திவேல் மன்ற கால்வாய் பகுதியில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு அதிகாலையில் வரும் அரசு பேருந்தில் தப்பி வந்துள்ளார் .

அப்போது ஒட்டன்சத்திரம் எஸ்.பி போலீசார்க்கு (ரகுபதி-கங்காதரண் ஆகிய இருவர்க்கும் தகவல் கிடைத்ததின் அடிப்படையில் ஒட்டன்சத்திரம் வனத்துறை சோதனைச்சாவடி அருகே வைத்து சத்திவேலை மடக்கி பிடித்து விசாரித்ததில் செந்தில்குமாரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

பின்பு எஸ்.பிபோலீசார் இவரை கைது செய்து ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஒப்படைக்கபட்டு நீதீவான் குற்றவாளியை திண்டுக்கல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.Conclusion:திண்டுக்கல். கொடைக்கானல் தாண்டிக்குடி அருகே குடிபோதையில் ஒருவர் கொலை. தப்பி வந்த கொலையாளியை ஒட்டன்சத்திரம் வனப்பகுதி சோதனைச்சாவடியில் வைத்து எஸ்.பி போலீசார் கைது செய்தனர்.
குறித்த செய்தி.

ABOUT THE AUTHOR

...view details