தமிழ்நாடு

tamil nadu

தாங்கள் கட்டிய கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு: தீக்குளிக்க முயன்ற தம்பதி... மறுத்துப்போன மனசாட்சி!

By

Published : Jan 20, 2020, 6:39 PM IST

திண்டுக்கல்: ஊருக்குப் பொதுவான இடத்தில் தாங்கள் கட்டிய கோயிலுக்குள் நுழைவதற்கு தங்களுக்கே அனுமதி மறுக்கப்பட்டதால் தம்பதி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

suicide
suicide

திண்டுக்கல் மாவட்டம் யாகப்பன்பட்டி பகுதியில் கிறிஸ்துராஜா-அந்தோணி ஜெனி மேரி தம்பதி வசித்துவருகின்றனர். இவர்கள் ஊருக்குச் சொந்தமான பொது இடத்தில் ரூ.4 லட்சம் மதிப்பில்சந்தியாகப்பர் கோயில் ஒன்றை கட்டியுள்ளனர்.

தம்பதிக்குத் தடை

ஆனால், தற்போது கோயிலின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதற்கு விழா நடத்தவோ, கோயிலினுள் நுழையவோ கூடாது என ஊர் மக்கள், கோயில் கட்டிய தம்பதிக்கு தடைவிதித்துள்ளனர். இனிமேல், அவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை என்றும் கொடுமையான அறிவிப்பையும் அந்த ஊர் மக்கள் கூறியுள்ளனர்.

மறுத்துப்போன மனசாட்சி

மேலும், திருவிழாக் காலங்களில் மட்டுமாவது நாங்கள் வந்துசெல்கிறோம் என்று கிறிஸ்துராஜா-அந்தோணி தம்பதியினர் கேட்டபோதிலும் அதற்கும் ஊர் மக்கள் மனசாட்சியின்றி மறுத்துள்ளனர். இதை மீறி நீங்கள் கோயிலுக்குள் நுழைய முயற்சித்தால் ஊரைவிட்டு தள்ளிவைப்போம் என அவர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி

மனமுடைந்த தம்பதி

இதனால் மனமுடைந்த கணவன்-மனைவி இருவரும், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்தனர். இதைப் பார்த்த காவலர்கள் உடனடியாக அவர்களைத் தடுத்துநிறுத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: காட்பாடி அருகே ரூ.3 லட்சம் திருட்டு: மருத்துவர் வீட்டில் கைவரிசை

Intro:திண்டுக்கல் 20.1.20

தாங்கள் கட்டிய கோவிலுக்குள் தங்களை அனுமதிக்க மறுப்பதை கண்டித்து கணவன் மனைவி தீக்குளிக்க முயற்சி


Body:திண்டுக்கல் மாவட்டம் யாகப்பன்பட்டியை சேர்ந்தவர் கிறிஸ்துராஜா. இவரது மனைவி அந்தோணி ஜெனி மேரி இவர்கள் இருவரும் திண்டுக்கல் மாவட்டம் யாகப்பன்பட்டியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தங்கள் பகுதிக்கு அருகே உள்ள ஊருக்கு சொந்தமான பொதுஇடத்தில் சந்தியாகப்பர் கோவில் ஒன்றை நான்கு லட்சம் மதிப்பில் கட்டியுள்ளனர். இக்கோவிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதற்கு விழா நடத்தவோ, கோயிலினுள் நுழையவோ கூடாது எனக்கோரி தடைவிதித்துள்ளனர். மேலும் இந்த கோயிலை கட்டுமானம் செய்து வரையிலேயே தங்கள் பணி நிறைவடைந்து விட்டதாகவும், இனி இந்த கோயிலில் எவ்வித உரிமையும் கிடையாது. இந்த கோயிலில் தங்கள் வரி செலுத்த தேவையில்லை என்று கூறியுள்ளனர்

இருப்பினும் திருவிழாக் காலங்களில் மட்டுமாவதை நாங்கள் வந்து செல்கிறோம் என்று கேட்டபோதிலும் அதற்கும் ஊர் மக்கள் மறுத்துள்ளனர். இதையும் மீறி தாங்கள் இந்தக் கோயிலில் நுழைய முயற்சித்தால் ஊரை விட்டு தள்ளி வைப்போம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கணவன் மனைவி இருவரும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்தனர். இதனை கண்ட போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



Conclusion:

ABOUT THE AUTHOR

...view details