தமிழ்நாடு

tamil nadu

அரசுப்பேருந்து மோதி கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு!

By

Published : Sep 15, 2019, 8:38 PM IST

திண்டுக்கல்: நண்பரின் உறவினர் வீட்டு திருமணத்திற்குச் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் மீது அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

accident

திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நண்பனின் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் கருப்பசாமி (20), கார்த்திக் (20) இருவரும் இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரத்திலிருந்து ஸ்ரீராமபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, தேனியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப்பேருந்து ஆண்டரசன்பட்டி வளைவில் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.

விபத்தில் மரணமடைந்த மாணவர்கள்

இதில் சம்பவ இடத்திலேயே கருப்பசாமி, கார்த்திக் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னிவாடி காவல் துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து மற்றும் இருசக்கரவாகனத்தை கன்னிவாடி காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.

Intro:திண்டுக்கல். 15.0919
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

நண்பரின் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்தில் பலி . கன்னிவாடி போலீசார் விசாரணை.
Body:திண்டுக்கல். 15.0919
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

நண்பரின் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்தில் பலி . கன்னிவாடி போலீசார் விசாரணை.

திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் அருகே உள்ள செம்பட்டி- ஒட்டன்சத்திரம் சாலையில் ஆண்டரசன்பட்டி பிரிவில் விபத்தில் இருவர் பலி. ஸ்ரீராமபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நண்பனின் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் தனியார் கல்லூரியில் B.Com 3-ம் ஆண்டும் பயிலும் மதுரை திருமங்கலம் கரிசல் பட்டியைச்சேர்ந்த கருப்பசாமி- 20 என்பவரும், அதே கல்லூரியில் B.Com 3-ம் ஆண்டு பயிலும் திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சோர்ந்த கார்த்திக்- 20 என்ற இரண்டு மாணவர்களும் இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரத்திலிருந்து ஸ்ரீராமபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது தேனியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்து ஆண்டரசன்பட்டி வளைவில் எதிர்பாராதவிதமாக இருசக்கரவாகனமும் பேருந்தும் நேருக்கு நேர்மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கல்லூரிமாணவர்களான கருப்பசாமி,கார்த்திக் உயிரிழந்தனர். தகவலறிந்த கன்னிவாடி காவல்துறையினர். உடலைக்கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்தனர்.

அரசு பேருந்துமற்றும் இருசக்கரவாகனத்தை கன்னிவாடி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக எடுத்துச்சென்றனர். அரசு பேருந்து ஓட்டுனர். பொள்ளாச்சியை சேர்ந்த பால்ராஜ் என்பரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.Conclusion:திண்டுக்கல். 15.0919
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

நண்பரின் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்தில் பலி . கன்னிவாடி போலீசார் விசாரணை.

இதுகுறித்த செய்தி.

ABOUT THE AUTHOR

...view details