தமிழ்நாடு

tamil nadu

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் இரவு திருவிழா: 60 ஆடுகளை நேர்த்திக்கடனாக செலுத்திய பக்தர்!

By

Published : Aug 11, 2023, 2:22 PM IST

வத்தலகுண்டு அருகே கோட்டை கருப்பணசாமி கோயிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடுகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஒரு பக்தர் 60 ஆடுகளை நேர்த்திக்கடனாக செலுத்தியது மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Devotee 60 Goats pay nerthikadan
60 ஆடுகளை நேர்த்திக்கடனாக செலுத்திய பக்தர்

60 ஆடுகளை நேர்த்திக்கடனாக செலுத்திய பக்தர்

திண்டுக்கல்: தென் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல், அந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் ஊர்மக்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனையும் நிறைவேற்றுவர். குறிப்பாக, சிலர் மொட்டை எடுப்பர். சிலர் பூமுடி போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம்.

சிலர் ஆடு, கிடா, கோழி போன்றவை உயிரினங்களை நேர்த்திக்கடன் செலுத்துவதாகவும், சிறிது செல்வாக்குப் படைத்தவர்களாக இருப்பின் வெள்ளி, தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் செலுத்துவதாகவும் வேண்டிக் கொள்வர். அதே போல் திருவிழா அன்று நிறைவேற்றவும் செய்வர். இந்நிலையில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா கொண்டாடப்படுகிறது.

அதாவது பிறந்த பெண் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை யாருமே கலந்து கொள்ளாமல் வெறும் ஆண்கள் மட்டும் கலந்து கொள்வர். அதில் நேர்த்திக்கடனாக வந்த ஆடுகளை வெட்டி ஒரு ஊருக்கே படையல் தயார் செய்து விருந்தளிப்பர். இதுவே இந்த திருவிழாவின் சிறப்பு ஆகும். சில கிராமங்களில் 5 அல்லது 3 ஆண்டு போன்று ஒரு குறிப்பிட்ட வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் என்பது வழக்கம்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள ப.விராலிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பழமையான அருள்மிகு கோட்டை கருப்பண சாமி கோயிலில் ஆடி திருவிழா சாட்டுதலுடன் தொடங்கியுள்ளது. அதாவது, வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் நடக்கும் இந்த திருவிழாவில் இரவு ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற உள்ளது.

தற்போது இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடுகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். ஆண்டு முழுவதும் பக்தர்களால் வழங்கப்படும் ஆடுகள், அறநிலையத்துறை மற்றும் ஊர் பொதுமக்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழாவினையொட்டி தற்போது வரை 900 ஆடுகள் வரை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதனிடையே எழுவனம்பட்டி பக்தர் முருகன் என்பவர் 60 ஆடுகளை இன்று காணிக்கையாக வழங்கியுள்ளார். 2 மினி லோடு வேன்களில் ஆடுகளை ஏற்றி வந்து கோட்டை கருப்பண சாமிக்கு காணிக்கையாக வழங்கியிருப்பது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியயையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பக்தர்களால் சுமார் 4 ஆயிரம் ஆடுகள் வரை நேர்த்திக்கடனாக செலுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.

நேர்த்திக்கடன் செலுத்த வந்த நபர் கூறுகையில், "விராலிப்பட்டி கிராமத்தில் கோட்டை கருப்புசாமி அருள்பாலித்து வருகிறார். நாங்கள் எங்களுக்குத் தேவையானதை வேண்டினோம், அது நிறைவேறியது. அதே மாதிரி வருடாவருடம், கருப்பன் எவ்வளவு கூறுகிறாரோ அதை வாங்கி விடுகின்றோம். சென்ற வருடம் 54 ஆட்டுக்குட்டி வாங்கி விட்டோம், இந்த வரும் கருப்பன் 60 குட்டி உத்தரவிட்டார். அதை வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளோம். மனதார எதை வேண்டினாலும் அதை நிறைவேற்றித் தருகிறார்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பராமரிப்பின்றி கிடக்கும் சாலை மின்விளக்குகள் - விபத்துக்கு வழிவகுக்கிறதா நகராட்சி?

ABOUT THE AUTHOR

...view details