தமிழ்நாடு

tamil nadu

கொடைக்கானலில் சிறுமி மர்ம மரணம்: நீதி கேட்டு வலுக்கும் போராட்டம்

By

Published : Dec 22, 2021, 7:55 AM IST

கொடைக்கானல் அருகே ஐந்தாம் வகுப்புப் பயிலும் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், போராட்டம் பல்வேறு கிராமங்களுக்கும் பரவித் தீவிரமடைகிறது.

5th grade girl died mysteriously in Kodaikanal, கொடைக்கானல் சிறுமி மர்ம மரணம்,
கொடைக்கானல் சிறுமி மர்ம மரணம்

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பாச்சலூர் கிராமம் அமைந்துள்ள‌து. இந்தக் கிராமத்தில் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சிறுமி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் எரிந்த நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இவரது இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி, கிராமத்தில் பலகட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், கொடைக்கானல் மேல்மலை கிராமமான‌ கூக்கால் கிராம‌த்தில், ம‌க்கள் த‌ங்க‌ளது குழ‌ந்தைகளைப் ப‌ள்ளிக‌ளுக்கு அனுப்பாம‌ல் போராட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.

சாலை மறியல் போராட்டம்

இந்த‌ச் சூழ‌லில், கொடைக்கான‌ல் வருவாய் கோட்டாட்சிய‌ர் முருகேச‌ன் அந்த‌க் கிராம‌த்திற்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுப‌ட்டார். பேச்சுவார்த்தையில் உட‌ன்ப‌டாத ம‌க்கள் உரிய‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்படும்வ‌ரை போராட்ட‌ம் தொட‌ரும் என‌த் தெரிவித்த‌ன‌ர்.

மேலும், மன்னவனூர் என்ற கிராமத்தில் மக்கள், சிறுமி உயிரிழப்புக்கு நீதி வேண்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் சிறுமியின் உயிரிழப்புக்கு உரிய பதில் கிடைக்கும்வரை தங்களுடைய போராட்டம் பல்வேறு கோணங்களில் தொடரும் என்று கொடைக்கானல் பகுதி கிராம மக்கள் சார்பாக தெரிவிக்கப்ப‌ட்டுள்ளது.

இதையும் படிங்க: கருணாநிதியின் நிழல் சண்முகநாதன் மறைவு: ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி

ABOUT THE AUTHOR

...view details