தமிழ்நாடு

tamil nadu

சாலையில் தலை குப்புற கவிழ்ந்த கார் - பதறவைக்கு சிசிடிவி காட்சி

By

Published : Dec 11, 2022, 8:58 PM IST

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

திண்டுக்கல்:வேடசந்தூர் அருகேவுள்ள காசிபாளையம் மேம்பாலத்தில் ஈரோட்டில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கிருஷ்ணன் என்பவர் ஓட்டிச் சென்றார்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், கரூர் - திண்டுக்கல் ரோட்டில் இருந்து தடுப்பை தாண்டி திண்டுக்கல் கரூர் சாலையில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் கிருஷ்ணன் உள்பட நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். விபத்தைக் கண்ட அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலையில் தலை குப்புற கவிழ்ந்த கார்

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:பட்டப்பகலில் கஸ்டமர் போல சலூனில் நுழைந்து கொள்ளையடித்த கும்பல்

ABOUT THE AUTHOR

...view details