தமிழ்நாடு

tamil nadu

தோழியை சீரழித்த மந்திரவாதி.. ஆணுறுப்பை அறுத்து கொலை நண்பர்கள்.. தருமபுரி வழக்கில் திடீர் திருப்பம்!

By

Published : Apr 7, 2023, 12:14 PM IST

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வனப்பகுதியில் ஆணுறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் இரு இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Etv Bharat
Etv Bharat

தருமபுரி:பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் தினேஷ்(வயது 28). தினேஷின் தந்தை கோவிந்தராஜ், ஓசூர் கெலவரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவரும் ஓசூரில் உள்ள அசோக் லேலண்ட் கம்பெனியில் ஒன்றாக பணியாற்றி வந்தனா்.

தந்தையின் நண்பர் என்ற முறையில் சசிகுமாருக்கும் தினேஷுக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிடித்த பெண்களை வசியம் செய்து, அவர்களுக்கு திருமணம் நடத்திக் கொடுக்க தன்னால் முடியும் என பலரையும் ஏமாற்றி மாந்திரீக பணி செய்து வந்துள்ளார் சசிகுமார். இதனை அறிந்த தினேஷ் தனது நீண்ட நாள் தோழியை காதலியாக மாற்றி, திருமணம் செய்ய சம்மதிக்க வைக்க வேண்டும் என சசிகுமாரை நாடி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து தினேஷ் தனது தோழியை மாந்திரீகம் செய்ய சசிகுமாரிடம் அழைத்து சொன்றுள்ளார். மாந்திரீகம் செய்யும் பொழுது அந்தப் பெண்ணைத் தவிர வேறு யாரும் உடன் இருக்கக்கூடாது, ஒரு கிலோமீட்டர் தூரம் தள்ளி இருக்க வேண்டும் என சொல்லி தினேஷை வெளியே அனுப்பி உள்ளார் மந்திரவாதி சசிகுமார்.

அதனை நம்பி தினேஷ் அவர்களை தனியாக விட்டுவிட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக சென்று காதலிக்காக காத்திருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து தினேஷின் காதலி அழுதபடியே வந்துள்ளார். பின்னர் தன்னை மந்திரவாதி பாலியல் சீண்டல் செய்ததால் அழுதபடியே நடந்ததை கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் தனது உள்ளூர் நண்பரான குணாளன் மற்றும் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு நண்பருடன் இணைந்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

திட்டத்தின் படி பென்னாகரம் நண்பருக்கும், அவரது காதலியுடன் சேர்த்து வைக்க மாந்திரீகம் செய்ய வேண்டும் எனக் கூறி சசிகுமாரை நைஸாக பென்னாகரம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் பென்னாகரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மது அருந்தலாம் என ஆசை வார்த்தை கூறி வனப்பகுதியில் மது ஊற்றிக் கொடுத்துள்ளனர். மது போதையில் இருந்த சசிகுமாரை, கல்லால் தாக்கி, படுகாயம் அடையச் செய்துள்ளனர். மயக்கத்தில் இருந்த, மந்திரவாதி சசிகுமாரின் ஆடைகளைக் களைந்து, ஆணுறுப்பையும் அறுத்தெறிந்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து சசிகுமார் இறந்ததை உறுதி செய்துவிட்டு, பெரிய கற்களை தூக்கி மந்திரவாதி சசிகுமாரின் தலையில் போட்டு, முகத்தை சிதைத்து விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இந்நிலையில், ஓசூர் அட்கோ காவல்நிலையத்தில் சசிகுமாரின் மனைவி சுஜாதா தனது கணவரை இரண்டு நாட்களாக காணவில்லை எனவும், தனது கணவருடன் பணியாற்றும் கோவிந்தராஜின் மகன் தினேஷ் என்பவர் போன் மூலம் அழைத்ததின் பேரில் வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என புகார் அளித்தார். சுஜாதா பென்னாகரம் தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, அடையாளம் தெரியாமல் முகம் சிதைந்து, இறந்து கிடந்த பிரேதத்தை அடையாளம் காட்ட போலீசார் கூறியதன் பேரில் கணவர் என்பதை அவர் உறுதி செய்தார்.

வழக்கில் திடீர் திருப்பமாக மாரண்டஅள்ளி பகுதியைச் சேர்ந்த தினேஷ் வயது 28 தந்தை பெயர் கோவிந்தராஜ் என்பவரும்,
அதே ஊரைச் சேர்ந்த குணாளன் வயது 20 தந்தை பெயர் கோவிந்தன், என்பவரும் பென்னாகரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய பென்னாகரம் பகுதியை சேர்ந்த தினேஷின் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: காலேஜ் பஸ் மோதியதில் தந்தை, மகன் மரணம்: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

ABOUT THE AUTHOR

...view details