தமிழ்நாடு

tamil nadu

சித்த மருத்துவம் பயன்படுத்துவது வருத்தம் அளிக்கிறது - தர்மபுரி திமுக எம்.பி

By

Published : May 17, 2021, 4:43 PM IST

கரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவம் பயன்படுத்துவது வருத்தம் அளிக்கிறது என்று தர்மபுரி திமுக எம்.பி., செந்தில்குமார் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

சித்த மருத்துவம் பயன்படுத்துவது வருத்தம் அளிக்கிறது- தருமபுரி திமுக எம்பி
சித்த மருத்துவம் பயன்படுத்துவது வருத்தம் அளிக்கிறது- தருமபுரி திமுக எம்பி

தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் 12 மாவட்டங்களில் சித்த மருத்துவத்துடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அரசு சித்த மருத்துவம், அலோபதி மருத்துவ முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.

இந்நிலையில் தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சித்த மருத்துவம் பயன்படுத்துவது தவறு என்பது போன்ற கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் அந்தப் பதிவில், "திமுக ஒரு முற்போக்கு பகுத்தறிவு கட்சி. அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத மருத்துவ முறைகளைப் பயன்படுத்துவது வருத்தமளிக்கிறது. குறிப்பாக, கரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவம், நீராவிப் பிடித்தல் போன்ற நிரூபிக்கப்படாத மருத்துவ முறைகளில் அரசு ஈடுபடுவது மனித வளங்களை வீணாக்குவதற்கு ஒப்பானது.

இந்திய மருத்துவ கவுன்சிலின் சிறந்த மருத்துவர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை முதலமைச்சர் அமைத்து, அறிவியல் ஆராய்ச்சி அடிப்படையிலான சிகிச்சை முறையினை மேற்கொள்ள வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

கரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவம் பயன்படுத்துவது வருத்தம் அளிக்கிறது

ஆளுங்கட்சி எம்.பி அரசின் நடவடிக்கைகளை விமா்சனம் செய்வது ஏற்புடையது அல்ல என சில திமுக தொண்டா்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். அவரது ஃபேஸ்புக் பக்கத்திலேயே பலர் கண்டனம் தெரிவித்து சித்த மருத்துவத்திற்கு ஆதரவாகப் பதிவிட்டு வருகின்றனா்.

இதையும் படிங்க:நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் கரோனா நிதி வழங்கினார்

ABOUT THE AUTHOR

...view details