தமிழ்நாடு

tamil nadu

பாபர் மசூதி இடிப்பு தினம்:தருமபுரியில் தீவிர சோதனை..!

By

Published : Dec 5, 2020, 11:03 PM IST

தருமபுரி: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தருமபுரியில் காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தருமபுரியில் காவல் துறை தீவிர சோதனை  பாபர் மசூதி இடிப்பு தினம்  Police conduct intensive search in Dharmapuri  Babri Masjid Demolition Day  Police Checkup In Dharmapuri
Police conduct intensive search in Dharmapuri

டிசம்பர் 6, பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுவதால், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக ரயில் நிலையம், நகரப் பேருந்து நிலையம், புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையின்ர் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பாபர் மசூதி இடிப்பு நாள்: குமரியில் பலத்த பாதுகாப்பு

ABOUT THE AUTHOR

...view details