தமிழ்நாடு

tamil nadu

’சிறப்பான ஆட்சி தொடர மக்கள் ஆதரிக்க வேண்டும்’: பாமக தலைவா் ஜி. மணி பிரச்சாரம்

By

Published : Mar 14, 2021, 7:43 AM IST

எடப்பாடி பழனிசாமியின் சிறப்பான ஆட்சி தொடர மக்கள் தங்களுக்கு ஆதரவு தர வேண்டுமெனக் கோரி, வேளாண்துறை அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு ஆதரவாக பாமக தலைவர் ஜி.மணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

எடப்பாடி பழனிசாமியின் சிறப்பான ஆட்சி தொடர மக்கள் ஆதரிக்க வேண்டும் என தருமபுரியில் வேளாண்துறை அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து, பாமக தலைவர் ஜி.மணி பிரச்சாரம் மேற்கொண்டார்.
எடப்பாடி பழனிசாமியின் சிறப்பான ஆட்சி தொடர மக்கள் ஆதரிக்க வேண்டும் என தருமபுரியில் வேளாண்துறை அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து, பாமக தலைவர் ஜி.மணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தர்மபுரி: தமிழ்நாடு உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் ஐந்தாவது முறையாக பாலக்கோடு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடவிருக்கிறார். அவருக்கு ஆதரவாக பாமக தலைவர் ஜி.மணி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அமைச்சர் கேபி அன்பழகன் காரிமங்கலம் ராமசாமி கோயில் அருகே இருந்து தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது அமைச்சர் அன்பழகனை ஆதரித்து ஜி.கே.மணி பேசியதாவது:

”அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவது உறுதி. எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பில்லாமல் ஆட்சி செய்து பல்வேறு சாதனைகளைப் படைத்தவர். விவசாயக் கடன், நகைக் கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்துள்ளார். வீட்டுக்கு ஆண்டுக்கு ஆறு எரிவாயு உருளை, இல்லத்தரசிகளுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் நிதி உதவித் திட்டம் ஆகிய தேர்தல் அறிக்கைகளால் எதிர்க்கட்சியினர் பேச முடியாமல் திக்குமுக்காடிப் போய் உள்ளனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு, சீா்மரபினருக்கு ஏழு விழுக்காடு, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது யாருக்கும் எதிரானது அல்ல. ஜெயலலிதாவின் தொடர் ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி செய்த மகத்தான சமூக நீதி சாதனை. எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர்வதற்கு அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு வாக்களித்து நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.

இந்தப் பிரச்சாரத்தின்போது தர்மபுரி பாமக சட்டப்பேரவை வேட்பாளர் எஸ் பி வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க :தமிழர் பண்பாடு, இந்து மதம் சார்ந்த முக்கிய அறிவிப்புகள்: திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

ABOUT THE AUTHOR

...view details