தமிழ்நாடு

tamil nadu

முதன்முறையாக தருமபுரி வந்த வந்தே பாரத் ரயில்.. பொதுமக்கள் செல்பி எடுத்து உற்சாக வரவேற்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 10:33 AM IST

Vande Bharat train in Dharmapuri: முதன்முறையாக தருமபுரிக்கு வந்த வந்தே பாரத் ரயிலை, செல்பி எடுத்து ரயில் பயணிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

Vande Bharat train in Dharmapuri
தருமபுரிக்கு வந்த வந்தே பாரத் ரயில்

முதன்முறையாக தருமபுரி வந்த வந்தே பாரத் ரயில்

தருமபுரி: கோவை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் வரும் 30ம் தேதி முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை பாரத பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று கோவையில் தொடங்கியது.

அதாவது கோவையில் காலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை ஓட்டம் திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக தருமபுரிக்கு வந்தது. தருமபுரி ரயில் நிலையத்திற்கு காலை 8.30 மணிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 14 நிமிடங்கள் முன்பாகவே தருமபுரி ரயில் நிலையம் வந்த வந்தே பாரத் 2 நிமிடம் நின்று கடந்து சென்றது.

தற்போது தருமபுரிக்கு முதல் முறையாக வந்த வந்தே பாரத் ரயிலை வரவேற்க ரயில் பயணிகள் நல சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரயில் நிலையத்தில் குழுமி நின்று ரயிலை வரவேற்றனர். மேலும் ரயில் பயணிகள் ரயிலின் முன்பு நின்று செல்பி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் தருமபுரி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டுமென தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி செந்தில்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதன்படி வரும் 30ம் தேதி தொடங்கப்படும் வந்தே பாரத் ரயில் தருமபுரியில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தருமபுரியில் இருந்து கோவை செல்வதற்கும், பெங்களூரு செல்வதற்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதால், பயண நேரம் குறையும் என ரயில் பயணிகளிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ரயில் விபத்தை தவிர்த்த ரயில் நிலைய அதிகாரிக்கு விருது..!

ABOUT THE AUTHOR

...view details