தமிழ்நாடு

tamil nadu

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தர்மபுரி பூக்கள் சந்தையில் விலை கிடுகிடு உயர்வு

By

Published : Aug 30, 2022, 3:49 PM IST

தர்மபுரி பூக்கள் சந்தையில் மழையின் காரணத்தால், பூக்கள் விலை அதிகரித்திருந்த நிலையில், தற்போது விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விலை மேலும் உயர்ந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தருமபுரி பூக்கள் சந்தையில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தருமபுரி பூக்கள் சந்தையில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு

தர்மபுரி நகரப்பேருந்து நிலையத்தில் பூக்கள் சந்தை செயல்பட்டு வருகிறது. பென்னாகரம், தொப்பூர், பாலக்கோடு உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் சாகுபடி செய்த பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

கடந்த நான்கு தினங்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால், பூக்களின் வரத்து குறைந்து விலை அதிகரித்து விற்பனையானது. சென்னமல்லி கிலோ 700 ரூபாயாகவும், குண்டு மல்லி கிலோ 650 ரூபாயாகவும், காக்கடா கிலோ 500 ரூபாயாகவும், கனகாம்பரம் கிலோ 600 ரூபாயாகவும், ரோஸ் ஒரு கிலோ 240 ரூபாயாகவும் விற்பனையானது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தர்மபுரி பூக்கள் சந்தையில் விலை கிடுகிடு உயர்வு

நாளை விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் என்பதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ஓசூரில் நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விட்ட கூகுள் மேப்

ABOUT THE AUTHOR

...view details