தமிழ்நாடு

tamil nadu

608 அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் : அமைச்சர் தொடங்கிவைப்பு

By

Published : Jan 23, 2021, 3:21 PM IST

தருமபுரி: 608 அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கி வைத்தார்.

608 அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தொடங்கி வைத்தார்
608 அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தொடங்கி வைத்தார்

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா அதியமான் கோட்டையில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் 608 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இதன் கட்டுமான பணிகளை தமிழ்நாடு உயர்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கி வைத்தார்.

குடிசை மாற்று வாரியம் சார்பில் 60.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 608 அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு வீடும் தலா 400 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ளது. இப்பணிகள் 15 மாதங்களில் நிறைவுற்று விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், அரூா் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:அரசு ஊழியர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ. 88 கோடி ஒதுக்கீடு' - தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details