தமிழ்நாடு

tamil nadu

ஒகேனக்கல் நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக உயர்வு!

By

Published : Sep 10, 2020, 2:16 PM IST

தருமபுரி : கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

haemadhaema
haema

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பென்னாகரம், பாலக்கோடு, ஒகேனக்கல் ஆகிய இடங்களில் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது.

அதேபோல், காவிரி கரையோரப் பகுதிகளில் கிருஷ்ணகிரி, அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது.

கடந்த இரு தினங்களாக நீர்வரத்து ஐந்தாயிரம் கனஅடியாக இருந்த நிலையில், இன்று (செப்.10) மேலும் நான்காயிரம் கனஅடியாக உயர்ந்து தற்போது நீர்வரத்து ஒன்பதாயிரம் கனஅடியாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details