தமிழ்நாடு

tamil nadu

கனிமவளக்கொள்ளையைத் தடுத்த VAO - தருமபுரியில் டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி!

By

Published : May 2, 2023, 10:11 PM IST

கனிம வளக்கொள்ளையினை தடுத்த தன்னை டிராக்டரை ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாக மெனசி ஊராட்சி விஏஓ இளங்கோ என்பவர் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி என மெனசி ஊராட்சி விஏஓ இளங்கோ புகார் அளித்துள்ளார்

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா மெனசி ஊராட்சியின் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர், இளங்கோ(40). இவர் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் தன் மீது டிராக்டர் மோதி கொல்ல முயற்சி நடைபெறுவதாக இன்று (மே.2) புகார் மனு அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த அந்த மனுவில், 'பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா மெனசி வி.ஏ.ஓ.வாக பணிபுரிந்து வருகிறேன். நேற்று முன் தினம் இரவு 10:30 மணியளவில் வந்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மெனசி-குண்டல்மடுவு ரோட்டில் காளியம்மன் கோவில் அருகில் மெனசியைச் சேர்ந்த ராகவன் என்பவருக்குச் சொந்தமான டிராக்டரில் கனிமவளக்கற்களை ஏற்றிக்கொண்டு வரும் போது, நான் தடுத்து நிறுத்தும்போது என் மீது நேராக மோத முற்பட்டனர்.

நான் ஓரம் சென்றுவிட்டேன். இல்லையெனில் அவர்களது வண்டி மூலம் என்னைக் கொலை செய்து இருப்பார்கள். கடத்திய கற்களை கோவிந்தராஜ் என்பவரின் நிலத்தில் கொட்டி வைத்து உள்ளார்கள். ஆகவே, மெனசி கிராமத்தில் இரவு நேரங்களில் கள்ளத்தனமாக கனிமவளக்கற்களை கடத்திச் சென்ற ராகவன்(25), தம்பிதுரை(35) உட்பட இரண்டு நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களால் எனக்கு எந்த நேரத்திலும் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது, எனக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்தித்தரவேண்டும்' என்று அவர் கொடுத்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு வேப்பங்குடி கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் பணியின்போது ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அடுத்ததாக, சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகாவில் உள்ள மானாத்தாள் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் வினோத்குமார் என்பவர் மணல் கடத்திய டிராக்டர், பொக்லைன் உள்ளிட்ட வாகனத்தைப் பிடித்ததால் அதே பகுதியைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட நபர்கள் அவரை வெட்டிப் படுகொலை செய்ய விரட்டிய சம்பவமும் நடந்தேறியது.

இதனையடுத்து பணியின்போது உயிரிழந்த விஏஓ லூர்து பிரான்சிஸின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, ரூ.1 கோடி நிவாரணம் அளிக்கப்பட்டது. இருப்பினும், தமிழ்நாட்டில் அரசு அலுவலர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டப் பலரும் ஆளும் திமுக அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கொலை செய்யும் நோக்கில் செயல்பட்ட டிராக்டரை ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தனது உயிருக்கு அவர்களால் அச்சுறுத்தல் உள்ளதாகவும் மீண்டும் ஒரு விஏஓ கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:VAO Request Gun: கடமையைச் செய்ய அச்சுறுத்தல்.. கைத்துப்பாக்கி வழங்க விஏஓ சங்கம் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details