தமிழ்நாடு

tamil nadu

கிராமப்புறத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமுக எம்பி

By

Published : Dec 12, 2020, 2:09 PM IST

திமுகவின் விடியலை நோக்கி திட்டத்தை அடுத்து அக்கட்சியின் எம்பி செந்தில்குமார் தர்மபுரியில் உள்ள மலைக் கிராமங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

dharmapuri dmk mp senthilkumar on dmk propaganda for 2021 election
dharmapuri dmk mp senthilkumar on dmk propaganda for 2021 election

தர்மபுரி: தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வருவதை முன்னிட்டு தற்போதே அதற்கான பரப்புரை பணிகளை முடுக்கி விடப்பட்டுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின், எம்பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும், கட்சியின் எம்பி, எம்எல்ஏக்களும் பரப்புரை பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கிரமாப்புற சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமுக எம்பி

இந்நிலையில், விடியலை நோக்கி, ஸ்டாலின் குரல் என்ற பரப்புரை பயணத் திட்டத்தின் கீழ் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இன்று தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கலசபாடியில் மலைவாழ் மக்களிடம் கலந்துரையாடினார்.

கிரமாப்புற சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமுக எம்பி

மலை அடிவாரத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களுடன் சுமார் 4 கி.மீ தொலைவிற்கு இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று பரப்புரையைத் தொடங்கினார். பின்னர் பொதுமக்களிடம் பேசிய அவர், கிராமத்தில் சாலை வசதி இல்லாத நிலையில் கடந்த திமுக ஆட்சியில் தான் மண் சாலை அமைக்கப்பட்டது. விரைவில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழும் அப்போது, மக்களின் அனைத்து பிரச்னைகளும் தீர்த்து வைக்கப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினா் தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இதையும் படிங்க:எடப்பாடி தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட கனிமொழி

ABOUT THE AUTHOR

...view details