தமிழ்நாடு

tamil nadu

சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்ற மறுத்த தலைமையாசிரியர் மீது புகார்

By

Published : Aug 16, 2022, 10:47 PM IST

தர்மபுரியில் சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்ற மறுத்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

தலைமையாசிரியர் மீது புகார்
தலைமையாசிரியர் மீது புகார்

இந்தியாவின் 76 ஆவது சுதந்திர தின விழா நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவியருக்கு இனிப்பு வழங்கினர்.

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பேடர அள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தேசிய கொடியை ஏற்ற மறுத்ததாகவும் அதனை அடுத்து பள்ளியில் பணிபுரியும் முருகன் என்ற ஆசிரியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி உள்ளனர்.

தலைமையாசிரியர் மீது புகார்

இச்சம்பவம் தொடர்பாக நேற்று வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் பேசிய தலைமை ஆசிரியை, தான் யாக்கோபாவின் சாட்சி என்ற உலக அளவிலான கிறிஸ்தவ அமைப்பின் ஒரு பகுதியை சார்ந்தவர். தாங்கள் எங்களின் கடவுளை மட்டுமே வணங்குவோம், வணக்கமும் தங்கள் தெய்வத்திற்கு மட்டுமே. தேசியக்கொடிக்கு மரியாதை தருகிறோம், தேசிய கொடியை அவமதிக்கவில்லை என்ற வீடியோ வைரல் ஆனது.

தலைமையாசிரியர் மீது புகார்

இதனை எடுத்து கிராம மக்கள் பள்ளி தலைமை ஆசிரியை தமிழ் செல்வி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தர்மபுரி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பள்ளிக்கு மாணவ மாணவியரை அனுப்ப மாட்டோம் என்றும் சென்னை வரை சென்று உயர் அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:விவாகரத்து கோரிய வழக்கில் கணவரை வீட்டை விட்டு வெளியேற உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details