தமிழ்நாடு

tamil nadu

அங்காள பரமேஸ்வரி அம்மன் பிரதிஷ்டை விழா

By

Published : Nov 27, 2020, 7:52 PM IST

தருமபுரி: அன்னசாகரம் அருகே புதிதாக வடிவமைக்கப்பட்ட அங்காளம்மன், தாண்டேஸ்வரர் சுவாமி சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்து கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அங்காள பரமேஸ்வரி அம்மன் பிரதிஷ்டை விழா
அங்காள பரமேஸ்வரி அம்மன் பிரதிஷ்டை விழா

தருமபுரி மாவட்டம் அன்னசாகரம் அருகேயுள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அங்காளம்மன், தாண்டேஸ்வரர் சுவாமி சிலைகள் புதிதாக வடிவமைக்கப்பட்டன.

இன்று (நவ.27) இக்கோயிலில் சுவாமி சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்து கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அங்காள பரமேஸ்வரி அம்மன் பிரதிஷ்டை விழா

பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் கணபதி ஹோமம் செய்தார். பின்னர் சுவாமி சிலைகளுக்கு கண் திறக்கப்பட்டது. தொடர்ந்து இளநீர், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் ஆகிய அபிஷேகங்களுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

அங்காள பரமேஸ்வரி அம்மன் பிரதிஷ்டை விழா

மேலும் அங்காளம்மன், தாண்டேஸ்வரா் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:தெய்வீக தமிழக சங்கம் சார்பில் ‘தேசியம் காக்க, தமிழகம் காக்க’ புத்தகம் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details