தமிழ்நாடு

tamil nadu

சிப்காட்: பாய்லர் வெடித்து நான்கு பேர் உயிரிழப்பு

By

Published : May 13, 2021, 8:59 AM IST

Updated : May 13, 2021, 12:00 PM IST

கடலூரில் ரசாயன பாய்லர்
கடலூரில் ரசாயன பாய்லர்

08:57 May 13

கடலூர் மாவட்டம் சிப்காட்டில் உள்ள ரசாயன தொழிற்சாலையில், பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் சிப்காட்டில் உள்ள கிரிம்சன் என்னும் பூச்சிக்கொல்லி தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று (மே.13) காலை பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 20 தொழிலாளர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள்  தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் சம்பவ இடத்திற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதையும் படிங்க:கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் நாளொன்றுக்கு 1000 தடுப்பூசிகள் இலக்கு

Last Updated : May 13, 2021, 12:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details