தமிழ்நாடு

tamil nadu

கடலூரில் 14 காவலர்களுக்கு கரோனா!

By

Published : May 12, 2020, 11:17 AM IST

கடலூர் மாவட்டத்தில் பத்து பயிற்சி பெண் காவலர்கள் உள்பட 14 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூரில் 14 காவலர்களுக்கு கரோனா!
கடலூரில் 14 காவலர்களுக்கு கரோனா!

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அத்தியாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் யாரும் வெளியே செல்லவேண்டாம் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநிலத்தில், சென்னைக்கு அடுத்தபடியாக கடலூரில்தான் வைரஸ் தொற்று அதிகம் உள்ளது. இந்நிலையில், கடந்த மூன்றாம் தேதி முதல் காவலர்களுக்கான பயிற்சி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பத்து பெண் காவலர்கள், இரண்டு உதவி ஆய்வாளர்கள் உள்பட 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பதுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

காவலர்களுக்கான பயிற்சி பள்ளி

இதனைத்தொடர்ந்து, வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 14 பேரும் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பயிற்சியில் பங்கேற்ற 124 பெண் காவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்த சுகாதாரத் துறையினர், கடலூர் காவலர் பயிற்சிப் பள்ளியை தற்காலிகமாக மூடியுள்ளனர்.

இதையும் பார்க்க: 'செயல் திட்டம் இல்லை, தேர்தலில் மட்டுமே கவனம்'- விஜயனை வறுத்தெடுக்கும் காங்கிரஸ்

ABOUT THE AUTHOR

...view details