தமிழ்நாடு

tamil nadu

கணவரின் மரணத்தில் சந்தேகம்

By

Published : Dec 29, 2020, 10:58 AM IST

சென்னை: கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, காவல் ஆணையர் அலுவலகத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.

கணவரின் மரணத்தில் சந்தேகம்
கணவரின் மரணத்தில் சந்தேகம்

கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்தவர் சுந்தரவேல். இவரது மனைவி சந்திரா. சுந்தரவேல் சிங்கப்பூரில் மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், ஜூலை மாதம் 25ஆம் தேதி விமானம் மூலம் சுந்தரவேல் சென்னை திரும்பினார்.

சென்னை திரும்பிய அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டார். தனியார் நட்சத்திர விடுதியிலிருந்த சுந்தரவேல் இரண்டு நாட்களாக தொலைப்பேசியை எடுக்காததால் சந்தேகமடைந்த அவரது மனைவி சமூக வலைத்தளத்தில் விடுதியின் எண்ணைத் தேடி தொடர்பு கொண்டார்.

அதன்பின்னரே விடுதி ஊழியர்கள் சுந்தர வேலின் அறையை சோதனையிட்டபோது, சுந்தரவேல் இறந்து கிடந்தது தெரியவந்தது. ஏற்கெனவே வயிற்று வலி காரணமாக சுந்தரவேல் சிகிச்சை பெற்று வந்ததாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட தேனாம்பேட்டை காவல் துறையினர், சுந்தரவேலின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவரது மனைவி கூறியது, "இறந்த சுந்தரவேலுவுக்கு கரோனா தொற்று இல்லை என்றும், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக அவரது மனைவி தெரிவித்தார்.

ஆனால் வயிற்று வலியால் அவதிப்பட்ட அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும், தனது கணவரின் முகத்தில் காயம் இருந்ததாகவும், கணவர் கொண்டு வந்த பையில் பொருட்கள் காணாமல் போயுள்ளதாகவும் கூறினார். கடந்த 5 மாதமாக தன் கணவரின் இறப்பிற்கு என்ன காரணம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கவில்லை.

மேலும் எனது கணவரின் உடற்கூறு ஆய்வு அறிக்கையும் தெளிவாகக் கொடுக்கப்படவில்லை. இதற்காகப் பலமுறை எனது குழந்தையுடன் அலைந்தும், பல இடங்களில் மனு அளித்தும். எந்தவிதமான நியாயமும் கிடைக்கவில்லை எனவும், எனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் என் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்வது தவிர வேறு வழியில்லை என்றார்.

ABOUT THE AUTHOR

...view details