தமிழ்நாடு

tamil nadu

வெளிநாட்டில் வேலை; ஏமாற்றிய தம்பதி மீது புகார்!

By

Published : Jun 10, 2019, 9:50 PM IST

கடலூர்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.6.55 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தம்பதி புகார் அளித்துள்ளனர்.

தம்பதி மீது புகார்

கடலூர் மாவட்டம், விருதாச்சலம் பெரியார் நகரை சேர்ந்தவர்கள் ராமலிங்கம் - மகேஸ்வரி தம்பதி. இவர்கள் அதேபகுதியை சேர்ந்த சிலரிடம் வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பிய சிலர் தம்பதியிடம் ரூ. 6.55 லட்சம் வரை பணத்தை கொடுத்துள்ளனர்.

பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 6.55 லட்சம் மோசடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோர் புகார்

கடலூர்
ஜூன் 10,

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 6.55 லட்சம் மோசடி செய்த கணவன் மனைவி இருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இழந்த பணத்தை மீட்டுத்தரக் கோரியும் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியதாவது; விருதாச்சலம் பெரியார் நகரைச் சேர்ந்தவர்கள் ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி. ராமலிங்கம் கத்தார் நாட்டில் வேலை பார்த்து வருவதாகவும் அங்கு அவர் கம்பெனியில் ஆட்கள் தேவைப்படுவதாகவும் மகேஸ்வரி எங்களிடம் கூறினார். நாங்கள் அதை நம்பி 6.55 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தோம்.பணத்தை பெற்றுக் கொண்ட மகேஸ்வரி எங்களை கத்தார் நாட்டுக்கு அனுப்பி வைத்தார் அங்கு அவரது கணவர் எங்களை ஒரு அறையில் தங்க வைத்துவிட்டு அவர் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. உணவும் சரியாக வழங்கவில்லை. இது குறித்து எங்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தோம். பின்னர் அவர்கள் உடனடியாக ஊருக்கு கிளம்பி வரும்படி கூறினார்கள். அதனைத் தொடர்ந்து நாங்கள் ஐந்து பேரும் சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்து விட்டோம்.

பின்னர் இதுகுறித்து மகேஸ்வரியிடம் நாங்கள் கூறினோம் மேலும் எங்களுடைய பணத்தை திருப்பித் தரும்படி கேட்டோம் ஆனால் அவர் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை வேலையும் வாங்கித் தராமல் ஏமாற்றி விட்டார் எங்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த மகேஸ்வரி மற்றும் அவருடைய கணவர் ராமலிங்கம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இழந்த பணத்தை மீட்டுத்தரும் வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

Video send ftp

File name: TN_CDL_04_10_FOREIGN_WORK_FRAUD_7204906

ABOUT THE AUTHOR

...view details

தொடர்புடைய கட்டுரைகள்