தமிழ்நாடு

tamil nadu

கடலூரில் திமுக நிர்வாகி மீது ஓபிஎஸ் தரப்பு நிர்வாகி துப்பாக்கிச் சூடு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 8:17 PM IST

கடலூரில் முன்விரோதம் காரணமாக ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்தவர்கள், திமுக நிர்வாகி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Etv Bharat
Etv Bharat

கடலூர்: விருத்தாசலம் அருகே மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ. இவரது மகன் இளையராஜா. இவர் திமுக கட்சியில் உறுப்பினராக உள்ளார்.

இந்த நிலையில், இளையராஜாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்து உள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், இன்று இளையராஜா தனது வயலில் உள்ள செங்கல் சூளையில் இருந்து காரில் புறப்படும் பொழுது, ராஜசேகர் மகன்கள் ஆடலரசன் மற்றும் புகழேந்தி அவரது கூட்டாளிகள் சேர்ந்து கொண்டு இளையராஜாவை துப்பாக்கியால் சுட்டு உள்ளனர்.

இதில் காயம் அடைந்த இளையராஜாவை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். மேலும், இது குறித்து காவல் துறையினர் விசாரிக்கையில், முன் விரோதம் காரணமாக ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த மாவட்ட தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் பொறுப்பில் உள்ள புகழேந்தி மற்றும் அவரது தம்பி ஆடலரசன், அவர்களது கூட்டாளிகள் இரண்டு பேர் சேர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இளையராஜா காவல் துறையிடம் தகவல் தெரிவித்து உள்ளார். இது குறித்து விருத்தாசலம் காவல் துறையினர் தலைமறைவானவர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:கோவை மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளியில் திடீர் ஆய்வு.. காலை உணவை சாப்பிட்டு பாடம் எடுத்து மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details